இந்தியாவில் வங்கித்தொழில் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் முதன்முதலாகத் துவங்கியது. இந்தியாவின் மிகப்பழமையான வங்கி இந்திய ஸ்டேட் வங்கியாகும், அது 1806 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் செயல்படத் துவங்கியது. இந்திய ஸ்டேட் வங்கி ஓர் அரசுடைமை வங்கியும், நாட்டின் மிகப்பெரும் வணிக வங்கியுமாகும். மைய வங்கித்தொழிலின் பொறுப்புகளை மேற்கொண்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியானது , 1935 ஆம் ஆண்டில், அப்போதைய இந்திய இம்பீரியல் வங்கியிடமிருந்து இந்த பொறுப்புகளை முறைப்படி பெற்றுக்கொண்டதும், அதனை வணிகவங்கியாகச் செயல்படும் நிலைக்குத் தாழ்த்தியது. 1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்றபின், ரிசர்வ் வங்கி தேசியமயமாக்கப்பட்டு, அதற்கு பரந்த அதிகாரங்கள் வழங்கப் பெற்றது. 1969 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம், 14 மிகப்பெரும் வணிக வங்கிகளை அரசுடைமையாக்கியது; அதேபோல் 1980 ஆம் ஆண்டில் மேலும் ஆறு அடுத்த மிகப்பெரும் வங்கிகளை அரசுடைமையாக்கியது. தற்சமயம், இந்தியாவில் 96 அட்டவணையிட்ட வணிக வங்கிகள் (ஷெட்டியூல்ட் வணிக வங்கிகள்) (எஸ்சிபிகள்) உள்ளன - 27 பொதுத்துறை வங்கிகள் (அதாவது, இந்திய அரசாங்கம் தன்வசமே பணயப்...
Collecting and Translating various sources for personal use, Tamil Materials for UPSC Mains