Skip to main content

Posts

Showing posts with the label Inflation

Inflation

பொருளாதாரத்தில் பண வீக்கம் ( Inflation ) என்பது சந்தையிலுள்ள பொருட்களின் பொதுவான விலை உயர்வால், அந்த நாட்டின் நாணயத்தின் பொருட்களை வாங்கும் திறன் (அல்லது சந்தை மதிப்பு) உள்நாட்டுச் சந்தையில் குறைந்து போவதை குறிக்கும். விலை அதிகரிக்கும் போது ஒரு நாணயத்தைப் பயன்படுத்தி வாங்கப்படும் பொருள்கள் மற்றும் சேவையின் அளவும் குறைகிறது, ஆகவே பணவீக்கம் என்பதை, பணத்தின் வாங்கும் திறனின் வீழ்ச்சி என்றும் கூறலாம் - இதை அகப் பரிவர்த்தனச் சாதனம் மற்றும் பொருளாதாரத்தின் மதிப்பீட்டு அளவின் மதிப்பில் ஏற்படும் இழப்பு என்றும் கொள்ளலாம். [1] [2] விலை வீக்கத்தின் முக்கிய அளவீடு பணவீக்க வீதம் ஆகும். பணவீக்க வீதம் என்பது ஒரு குறிப்பிட்ட கால அளவில் பொது விலைப் பட்டியலில் (வழக்கமாக நுகர்வோர் விலைப் பட்டியலில் ) ஏற்படும் சதவீத மாற்றத்தின் ஓராண்டுக்கான மதிப்பாகும். [3] அதிக பட்ச பணம் குறைந்த பட்ச பொருட்களை துரத்தி செல்வது பணவீக்கம் என்கிறார் வாக்கர். அதாவது அதிக தேவை குறைந்த அளிப்பு எனும் நிலைப்பாடு காரணமாக பணத்தின் பெறுமதி குறைவடைவது என்பதை இது குறிக்கிறது. எனவே பருவ கால விலையேற்றங்கள் இதில் வருவதில்ல...